/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் நிர்வாக இயக்குநர் மதுசூதனன் ரெட்டி ஆய்வு
/
நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் நிர்வாக இயக்குநர் மதுசூதனன் ரெட்டி ஆய்வு
நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் நிர்வாக இயக்குநர் மதுசூதனன் ரெட்டி ஆய்வு
நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் நிர்வாக இயக்குநர் மதுசூதனன் ரெட்டி ஆய்வு
ADDED : அக் 26, 2025 05:00 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 148 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழைய நகராட்சி அலுவலகத்தை புனரமைத்து திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகம் கட்டப்படுகிறது. இப்பணியை நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதனன் ரெட்டி ஆய்வு செய்தார்.
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 350 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை கூடுதல் புதிய கட்டடம் கட்டுமான பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டார். பின், மாம்பழப்பட்டு பகுதியில் உள்ள உரம் மையத்தில் குடியிருப்பு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை செயலாக்கம் செய்து உரம், மக்க வைத்து அறவை செய்து சரியான முறையில் சலித்து உரத்தை விவசாய பயன்பாட்டிற்கு செயல்படுத்துவதையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, காமதேனு நகரில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 13 புதிய தார்சாலை பணி, சாலாமேடு பகுதியில் 4.88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணி, திருப்பாச்சனுார், மலட்டாற்றில் இருந்து 5 ஆழ்துளை கிணறும், 5.4 கி.மீ., துாரம் குழாய் பதிக்கும் பணிகள் நடப்பதையும் பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
எருமனந்தாங்கல் பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 116 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 15 புதிய மின்மோட்டார் இயந்திரம் மாற்றுதல், கழிவுநீர் தொட்டிகள் துார்வாரி பராமரிப்பு பணிகள் செய்வதை ஆய்வு செய்தார்.
கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான், நகராட்சி கமிஷனர் வசந்தி, பொறியாளர் புவனேஸ்வரி, நகர்நல அலுவலர் ஸ்ரீபிரியா, மண்டல செயற்பொறியாளர் சுரேந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் ராபட் கிளேவ், கவுதம், பணி ஆய்வாளர் ஹரிஹரன் உடனிருந்தனர்.

