/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முத்து மாரியம்மன் கோவிலில் மகா சண்டி யாகம்
/
முத்து மாரியம்மன் கோவிலில் மகா சண்டி யாகம்
ADDED : ஜூலை 28, 2025 02:09 AM

விழுப்புரம்: முத்துமாரியம்மன் கோவில் மகா சண்டி யாகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம், கிழக்கு பாண்டி சாலை, பீம நாயக்கன் தோப்பில், 144 ஆண்டுகள் பழைமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மண்டலாபிஷேக பூர்த்தியையொட்டி, 108 கலச அபிஷேகம், மகா சண்டியாகம் நடந்தது. இதில் கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடை பெற்றன.
மகா காளி, மகாலட்சுமி, சங்கரிதேவி, ஜெயதுர்கா, மகா சரஸ்வதி, பத்மாவதி, ராஜமாதங்கி, பவானி, அர்த்தாம்பிகை, காமேஸ்வரி, புவனேஸ்வரி, சூலினிதுர்கா, திரிபுரசுந்தரி ஆகியோருக்கு, பட்டுப்புடவை, பழங்கள், பூமாலைகளை யாகத்தில் செலுத்தி, 13 அத்தியாய ேஹாமங்கள் நடந்தன.
இதில், நோய்களை நீக்கும் ஜெயதுர்கா சுவாமிக்கான யாகத்தில், லட்சுமணன் எம்.எல்.ஏ., மற்றும் தி.மு.க., நிர்வாகிகள்  தமிழக முதல்வர் ஸ்டாலின் பூரண உடல்நலம் பெற வேண்டி வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் புருஷோத்தமன், அறங்காவலர்கள் ஸ்ரீதர், ரேணுகா குபேரன் ஆகியோர் செய்தனர்.

