/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கியவர் கைது
/
டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கியவர் கைது
ADDED : அக் 26, 2025 04:44 AM
செஞ்சி: கடன் தர மறுத்த டாஸ்மாக் விற்பனையாளரை பீர் பாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி அடுத்த வளத்தியைச் சேர்ந்தவர் பரணிதரன், 52; செஞ்சி மார்க்கெட் கமிட்டி எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் கடைக்கு வந்த, செஞ்சி, சக்கராபுரம் பழைய காலனியைச் சேர்ந்த சங்கர், 43; பிராந்தி பாட்டில் கடனாக கேட்டுள்ளார்.
பாணிதரன் தரமறுத்ததால், ஆத்திரமடைந்த சங்கர், கடையில் இருந்த பில் போடும் மெஷினை பிடுங்கி பரணிதரனின் தலையில் பீர்பாட்டிலால் தாக்கினார்.
படுகாயம் அடைந்த பரணிதரன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.
புகாரின் பேரில், செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து சங்கரை கைது செய்தனர்.

