ADDED : ஏப் 25, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த சுந்தரிபாளையத்தைச் சேர்ந்தவர் கமல், 37; திருமணமானவர். இவர், திருமணமான 27 வயது பெண்ணுடன், 2 ஆண்டுகளாக தொடர்பில் இருந்துள்ளார்.
அந்த பெண் சில மாதங்களாக பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கமல், அந்த பெண்ணை திட்டி தாக்கினார்.
தடுக்க வந்த அவரது உறவினர் ஒருவரையும் தாக்கியதில், இருவரும் பலத்த காயமடைந்தனர்.
புகாரின் பேரில், கமல் மீது வளவனுார் போலீசார் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

