/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடு புகுந்து நகை திருடியவர் கைது
/
வீடு புகுந்து நகை திருடியவர் கைது
ADDED : அக் 15, 2025 11:01 PM
திண்டிவனம்: திண்டிவனம் அருகே வீட்டின் கதவை திறந்து இரண்டே கால் சவரன் நகைகளை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் அடுத்த அண்டப்பட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ஜெயந்தி, 42; இவரது வீட்டின் கதவை திறந்து கடந்த 10ம் தேதி இரும்பு பீரோவை உடைத்து அதிலிருந்த இரண்டே கால் சவரன் நகைகளை சில தினங்களுக்கு முன் மர்மநபர் திருடிச்சென்றார்.
ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தபோது, திண்டிவனம் அடுத்த சிங்கனுார் புதுகாலனியை சேர்ந்த அசோக் என்கிற கலைஞர் பித்தன், 43; என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதை தொடர்ந்து, அசோக்கை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த இரண்டே கால் சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.