/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபர் கைது
/
அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபர் கைது
ADDED : அக் 15, 2025 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: அதிவேகமாக பைக் ஓட்டிய புதுச்சேரி மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காந்தி சிலையருகே உள்ள நேருஜி சாலையில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, அதி வேகமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த, புதுச்சேரி மாநிலம், பூமியான்பேட்டை, பாவா நகரை சேர்ந்த பெருமாள் மகன் சாகர்,35; என்பவரை மடக்கி பிடித்து, வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.