/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறுவனுார் ஊராட்சி பள்ளி நுாற்றாண்டு விழா
/
சிறுவனுார் ஊராட்சி பள்ளி நுாற்றாண்டு விழா
ADDED : அக் 15, 2025 11:00 PM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நுாற்றாண்டு விழா நடந்தது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சிறுவானுாரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கடந்த 1925ம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்பள்ளி துவங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து நூற்றாண்டு விழா நடந்தது.
விழாவிற்கு, ஊராட்சி தலைவர் பாரதி மோகன்ராஜ் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் மாலதி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் சிவபாலன், ஜெகநாதன், முத்துகிருஷ்ணன் மற்றும் முன்னாள் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் பொய்யாமொழி, பழனிவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
வட்டார கல்வி அலுவலர் ஜெய்சங்கர், அம்பிகா உட்பட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாணிக்கம், வட்டார வள மையம் மேற்பார்வையாளர் காசிநாதன், ஆசிரியர் பயிற்றுனர் மதிவண்ணன் மற்றும் முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.