/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தாய், மகள் மாயம் போலீஸ் விசாரணை
/
தாய், மகள் மாயம் போலீஸ் விசாரணை
ADDED : அக் 15, 2025 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பத்தில் மாயமான தாய், மகளை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜமியத் நகரை சேர்ந்தவர் தமிமுல் அன்சாரி. இவரது மனைவி நாச்சியா, 24; இவர்களது மகள் அப்ரீதா, 4; கடந்த 9ம் தேதி காலை 9;00 மணிக்கு நாச்சியா, தனது மகளுக்கு ஆதார் கார்டு வாங்க, வீட்டில் இருந்து குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே சென்றார்.
அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன தாய், மகளை தேடி வருகின்றனர்.