/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மண்ணெண்ணெய் பதுக்கல் ஒருவர் கைது
/
மண்ணெண்ணெய் பதுக்கல் ஒருவர் கைது
ADDED : ஜூலை 02, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் ரேஷன் கடை மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம், பாப்பான்குளத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்குள்ள வாகனங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் ஒர்க் ஷாப்பில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் மண்ணெண்ணய் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் கடை உரிமையாளரான விழுப்புரம் அடுத்த டி.மேட்டுப்பாளையம் சீனுவாசன், 48; என்பவர் பெயிண்ட் அடிக்க பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சீனுவாசனை கைது செய்த போலீசார் 360 லிட்டர் மண்ணெண்ணய் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.