/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மனநலம் பாதித்த பெண்ணை கொலை செய்த நபர் கைது
/
மனநலம் பாதித்த பெண்ணை கொலை செய்த நபர் கைது
ADDED : நவ 12, 2024 08:18 AM

மரக்காணம்: மரக்காணத்தில் மனநலம் பாதித்த பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த பெரியமண்டவாயை பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி மகள் வளர்மதி, 30; மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர், அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி மரக்காணம் பகுதிகளில் சுற்றித் திரிவது வழக்கம்.
மரக்காணம், சந்தைதோப்பை சேர்ந்த மூர்த்தி மகன் பாலா, 35; இவர், ஆதரவின்றி தனிமையில், மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று மரக்காணம் பகுதிகளில் சுற்றித் திரிந்து வந்தார். இரவு நேரத்தில் பஸ் நிலையத்தில் துாங்குவார்.
பல நாட்களாக வளர்மதி மற்றும் பாலா இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக் கொள்வார்கள். இதை பொதுமக்களும் வேடிக்கை பார்த்தபடி செல்வர்.
இந்நிலையில், நேற்று காலை 10:45 மணியளவில், மரக்காணம் பஸ் நிலையம் எதிரே வழக்கம் போல் வளர்மதி, பாலாவை திட்டி கல்லால் தாக்கியுள்ளார்.
பதிலுக்கு பாலா, வளர்மதி கையில் இருந்த கல்லை பறித்து வளர்மதியின் பின் தலையில் தாக்கினார்.
இதில் படுகாயமடைந்த வளர்மதி சம்பவ இடத்திலேயே இறந்தார். மரக்காணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாலாவை கைது செய்தனர்.