/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக்கில் மதுபாட்டில் கடத்தியவர் கைது
/
பைக்கில் மதுபாட்டில் கடத்தியவர் கைது
ADDED : ஆக 18, 2025 01:05 AM
விழுப்புரம்: பைக்கில் நுாதன முறையில் புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவில், டவுன் டி.எஸ்.பி., தனிப்படை போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அவர், விழுப்புரம் அடுத்த சாலையாம்பாளையத்தை சேர்ந்த சவுந்தர்ராஜன், 36; என்பதும், மடுகரையில் இருந்து 130 மதுபாட்டில்களை பைக்கின் பெட்ரோல் டேங்க், சீட்டின் அடிப்பகுதிகளில் கடத்தி வந்து ஜி.ஆர்.பி., தெரு அங்கன்வாடி மையம் அருகில் பதுக்கி வைத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சவுந்தர்ராஜன் மற்றும் மதுபாட்டில்கள், பைக்கை பறிமுதல் செய்து, விழுப்புரம் மேற்கு போலீசாரிடம், தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து சவுந்தர்ராஜனை கைது செய்து விசாரிக்கின்றனர்.