/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாராயம் குடித்தவர் சாவு திண்டிவனம் அருகே பரபரப்பு
/
சாராயம் குடித்தவர் சாவு திண்டிவனம் அருகே பரபரப்பு
ADDED : டிச 09, 2024 04:49 AM

திண்டிவனம் : திண்டிவனம் அருகே புதுச்சேரி சாராயம் குடித்து வாலிபர் இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி மகன் கலாநிதி, 36; கூலித் தொழிலாளி. குடிப்பழக்கம் .உள்ளவர். இவர், நேற்று காலை புதுச்சேரி, சேதராப்பட்டில் உள்ள சாராயக்கடையில் குடித்துவிட்டு, வீட்டில் குடிப்பதற்கு பாட்டிலில் சாராயம் வாங்கி வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்தவர் மயங்கி விழுந்தார். உடன், திண்டிவனம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கலாநிதி புதுச்சேரி சாராயம் குடித்ததால்தான் இறந்தாரா அல்லது அவரது இறப்பிற்கு வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.