ADDED : ஏப் 09, 2025 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : கிளியனுார் அருகே கிணற்றில் தவறி விழுந்தவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிளியனுார் அடுத்த கோவடி மேட்டு தெருவைச் சேர்ந்தவர் ராஜி, 40; இவர், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு அதே கிராமத்தில் உள்ள பொது கிணற்று பக்கவாட்டு சுவற்றில் அமர்ந்து, அதே பகுதியை சேர்ந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தார்.
நீரில் மூழ்கிய அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜி இறந்தார்.
புகாரின் பேரில் கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.