/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஐயப்ப சாமிக்கு மண்டலாபிஷேக விழா
/
ஐயப்ப சாமிக்கு மண்டலாபிஷேக விழா
ADDED : டிச 26, 2024 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் ரயிலடி வரசித்தி விநாயகர் கோவிலில், ஐயப்ப சாமிக்கு மண்டலாபிஷேக விழா நடந்தது.
வரசித்தி விநாயகர் கோவிலில் உள்ள தர்மசாஸ்தா சன்னதியில், மண்டலபிஷே விழா நேற்று காலை 7.00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. காலை 10.30 மணிக்கு ஐயப்ப சாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. முன்னதாக பால் குடங்களுடன், ரயிலடி ராஜகணபதி ஆலயத்திலிருந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
தொடர்ந்து சாமிக்கு பால் அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும், ஆராதனையும் நடந்தது. இதனையடுத்து, 1.00 மணிக்கு அன்னதானம் நடந்தது. தொடர்ந்து மாலை சுவாமிக்கு அலங்காரம் செய்து, படி பூஜையும், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.