/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுடுகாடு இடத்தில் மனைப்பட்டா; கலெக்டர் அலுவலகம் முற்றுகை
/
சுடுகாடு இடத்தில் மனைப்பட்டா; கலெக்டர் அலுவலகம் முற்றுகை
சுடுகாடு இடத்தில் மனைப்பட்டா; கலெக்டர் அலுவலகம் முற்றுகை
சுடுகாடு இடத்தில் மனைப்பட்டா; கலெக்டர் அலுவலகம் முற்றுகை
ADDED : ஆக 19, 2025 12:24 AM

விழுப்புரம்; செஞ்சி அருகே பொது சுடுகாடு இடத்தில் இலவச வீட் டு மனைப்பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து, கிராமத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
செஞ்சி அடுத்த அத்தியூர் கிராம மக்கள், ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டு முற்றுகையிட்டனர்.
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, விசாரணை நடத்தி மனு அளிக்கும்படி அறிவுறுத்தினர்.
மனு விபரம்:
அத்தியூரில் பல்வேறு சமுக மக்கள் 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கும் தனி, தனி சுடுகாடும், பிற சமுகத்தினருக்கு ஒரு பொது சுடுகாடும் உள்ளது. இந்நிலையில், இதர சமுகத்தினர் பயன்படுத்தி வரும் சுடுகாடு பகுதியில், பழங்குடி இருளர் மக்களுக்காக, அரசு சார்பில் இலவச மனை பட்டா வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது.
சுடுகாடு இடத்தில் அவர்களுக்கு பட்டா வழங்கினால், எங்கள் கிராமத்தில் இறப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இடமின்றி பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.
சுடுகாடு இடம் தவிர்த்து பல பொது இடங்கள் உள்ளது. ஆனால், கிராமத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில் பிரச்னை ஏற்படுத்தும் விதத்தில் சுடுகாடு இடத்தில் இலவச மனை பட்டா வழங்குவது ஏற்க கூடியதல்ல.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.