/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஏப் 19, 2025 01:12 AM
வானுார், ; நெசல் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
வானுார் அடுத்த நெசல் கிராமத்தில் மஹா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று, கும்பாபிஷேக விழா கடந்த 16ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது.
கணபதி ஹோமம், துர்கா ஹோமம், மாலை 4;00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், முதற்கால யாகவேள்வியும் நடந்தது.
நேற்று முன்தினம் 2ம் கால வேள்வியும், பூர்ணாஹூதியும், வேதா மூலமந்திர யாகம், மாலை 6;00 மணிக்கு மூன்றாம் கால யாக வேள்வி நடந்தது. நேற்று காலை 7;00 மணிக்கு, கோ பூஜை, நான்காம் கால யாக வேள்வி நடந்தது. காலை 9;00 மணிக்கு, மஹா மாரியம்மன் கோவில் விமான கோபுரம், மூலஸ்தான கோபுரத்திற்கும் புனிதகலச நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
அதனை தொடர்ந்து பரிவார மூர்த்திகளான விநாயகர், முருகர், துர்கை, காளியம்மன் சன்னதிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.