/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காயங்களுடன் கொத்தனார் மர்ம கொலை
/
காயங்களுடன் கொத்தனார் மர்ம கொலை
ADDED : அக் 09, 2024 01:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்:விழுப்புரம் மாவட்டம், கிளியனுார் அடுத்த கொஞ்சிமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ருத்ரகுமார், 40, கொத்தனார். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், மகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ருத்ரகுமார், இரவு 10:00 மணிக்கு வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச் சாலையில் கழுத்தில் காயங்களுடன் அவர் உடல் கிடந்தது.
தகவல் அறிந்த போலீசார், கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

