/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பழங்குடியினர் வீடு கட்ட ஆணை மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்
/
பழங்குடியினர் வீடு கட்ட ஆணை மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்
பழங்குடியினர் வீடு கட்ட ஆணை மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்
பழங்குடியினர் வீடு கட்ட ஆணை மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : ஏப் 19, 2025 01:14 AM

செஞ்சி, ; செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் பழங்குடியினர்கள் வீடு கட்டுவதற்கான ஆணைகளை மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கினார்.
செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 52 பழங்குடியினர்களுக்கு, 2 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டுவதற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி முன்னிலை வகித்தார். ஏ.பி.டி.ஓ., பழனி வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
துணை சேர்மன் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, மண்டல துணை பி.டி.ஓ.க்கள் கந்தசாமி, அபிராமி, சையத் முபாரக், கணேசன், ஊராட்சித் தலைவர்கள் ரவி, அம்பிகா, கலைச்செல்வி, ராஜலட்சுமி கலந்து கொண்டனர். ஏ.பி.டி.ஓ., சசிகலா நன்றி கூறினார்.