/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் வட்டார அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்
/
மயிலம் வட்டார அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்
ADDED : அக் 25, 2025 06:20 AM

மயிலம்: மயிலத்தில் நடந்த கல்லுாரி களப்பயண நிகழ்வில், அரசு பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
மயிலம் வட்டாரத்தில், 10 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் படிக்கும், 266 மாணவ மாணவியர்களை கல்லுாரி கலைப் பயணத்திற்காக, ஆசிரியர்கள் மயிலம் தமிழ் கல்லுாரிக்கு அழைத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து, கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார்.
கல்லுாரி செயலாளர் ராஜூவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார்.
இந்த நிகழ்வில் மாணவ, மாணவியர்கள் கல்லுாரி வளாகத்தில் உள்ள நுாலகம், ஆய்வரங்கம், நவீன வகுப்பறைகளை பார்வையிட்டனர். பின்னர் மாணவர் மாணவியர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் கல்லுாரி அனைத்து துறை தலைவர்கள், தலைமை ஆசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மற்றும் மயிலம் எஸ்.எஸ்.பி.எஸ்.,கல்லுாரியினர் செய்திருந்தனர். உதவி பேராசிரியர் சதீஷ் நன்றி கூறினார்.

