/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை
/
சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை
சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை
சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை
ADDED : ஜூலை 30, 2025 11:23 PM

விழுப்புரம்: கொத்தமங்கலம் ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க ரயில்வே நிர்வாகம் சார்பில் தரைதளம் உயர்த்தும் பணி நடக்கிறது.
விழுப்புரம் அடுத்த கொத்தமங்கலம் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக, கொத்தமங்கலம், கோனுார், வெண்மணியாத்துார் கிராம மக்கள் விழுப்புரம், காணை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும், அரசு பஸ்கள் மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி பஸ்கள் சென்று வருகின்றன.
இந்த சுரங்கப்பாதையில் மழைக்காலம் மட்டுமின்றி, வெயில் காலங்களிலும் தண்ணீர் சுரக்கிறது.
இதனால், சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.
இதனால் சுரங்கப்பாதை தரைதளத்தை உயர்த்த வேண்டும் என கலெக்டரிடம் ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தனர்.
இதையடுத்து, தரைதளத்தை ஒரு அடி உயரத்திற்கு உயர்த்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் துவங்கி நடந்து வருகின்றது.