ADDED : செப் 16, 2025 07:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சியில் ராயல் மெக்கானிக் சங்கத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா நடந்தது.
நகர தலைவர் மஹபூப்கான் தலைமை தாங்கினார். செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். பொருளாளர் ரமேஷ் வரவேற்றார்.
மாநில பொதுச் செயலாளர் குமரவேலு, தலைவர் செல்வம், தரணி இண்டர்நேஷனல் பள்ளி தாளாளர் தண்டபாணி, வழக்கறிஞர் பாண்டுரங்கன் பேசினார். மாநில ஆலோசகர் மனோகரன், துணை செயலாளர் சுந்தர், சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் சங்கர், செயலாளர் சுரேஷ், பொருளாளர் சீனுவாசன் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர்.
விழாவில் மூத்த உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர். 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளை பாராட்டி கேடயம் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
துணை பொருளாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.