
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் நகராட்சி பகுதியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, நகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
விழுப்பரம் அரசு மருத்துவமனையில் நடந்த முகாமை நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துப்புரவு அலுவலர் ஆல்பர்ட்அருள்ராஜ், துப்புரவு ஆய்வாளர் மதன்குமார் முன்னிலை வகித்தனர். 150க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர், ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் மற்றும் உடல் பரிசோதனை செய்து சிகிச்சையளித்தனர்.

