/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சூர்யா பாலிடெக்னிக்கில் மருத்துவ முகாம்
/
சூர்யா பாலிடெக்னிக்கில் மருத்துவ முகாம்
ADDED : ஜன 01, 2025 05:11 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி சூர்யா பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் சூர்யா பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் விழுப்புரம் மரகதம் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாமிற்கு கல்லுாரி தலைமை நிர்வாக அதிகாரி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.
மரகதம் மருத்துவமனை தலைமை இயக்குனர் ஷில்பா, டாக்டர் சிந்து முன்னிலை வகித்தனர் கல்லூரி முதல்வர் டாக்டர் வெங்கடேஷ் வரவேற்றார்.
மரகதம் மருத்துவமனை இயக்குனர்கள் டாக்டர்கள் திலீபன், சிட்டிபாபு ஆகியோர் தலைமையில் டாக்டர்கள் பிரதீக் ஷா, காவியா ஆகியோர் கொண்ட குழுவினர் முதல்வர் காப்பீட்டு திட்டம், மக்களை நாடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மாணவர்கள் , பேராசிரியர்கள் ஊழியர்கள் ஆகியோருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர்.கல்லுாரி துணை முதல்வர் மோகன், மருத்துவமனை மேலாளர் ரமேஷ், என் எஸ் எஸ் திட்ட அலுவலர் அறிவழகன், கல்லூரி துறை பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.