ADDED : நவ 16, 2025 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: அணிலாடியில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
வல்லம் ஒன்றியம் அணிலாடி ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடந்தது.ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார்.
ஊராட்சித் தலைவர் பிலோமினால் அருமைநாதன் முன்னிலை வகித்தார். வல்லம் வட்டார மருத்துவ அலுவலர் பத்மஷா வரவேற்றார்.
மஸ்தான் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் மாசிலாமணி, மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, இளம்வழுதி, ஒன்றிய கவுன்சிலர் சாந்தூஸ்மேரி, முன்னாள் தலைவர் லாரன்ஸ், ஊராட்சித் துணைத் தலைவர் ஆரோக்கிய மேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

