/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில் மோதிய விபத்தில் வாலிபர் கை துண்டானது
/
ரயில் மோதிய விபத்தில் வாலிபர் கை துண்டானது
ADDED : நவ 17, 2025 12:00 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பயணிகள் ரயில் மோதியதில், வாலிபரின் கை துண்டாகியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த பானாம்பட்டை சேர்ந்த வேலு மகன் அசோக், 23; இவர், நேற்று மாலை 3:45 மணிக்கு அங்குள்ள ரயில்வே கேட் அருகில் தண்டவாளத்தில் இருந்தார்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற பயணிகள் ரயில், அவர் மீது மோதியது. இதில், அசோக் இடது கை துண்டாகி மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள், அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அசோக் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா அல்லது எதிர்பாராதவிதமாக விபத்து நடந்ததா என விழுப்புரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

