ADDED : பிப் 16, 2025 03:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனத்தில் பா.ஜ., சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
வடக்கு மாவட்ட தலைவர் வினாயகம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், மத்திய அரசின் பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் குறித்து, மாநில துணை தலைவர் சம்பத், பொதுச் செயலாளர் பிரமிளா பேசினார்.
கூட்டத்தில், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஸ்ரீராம் பள்ளி தாளாளர் முரளி ரகுராமன், மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் ஜின்ராஜ், பிறமொழி பிரிவு மாநில செயலாளர் வினோத், வழக்கறிஞர் செந்தில், மாவட்ட பொதுச் செயலாளர் எத்திராஜ், இளைஞரணி தினேஷ்குமார், திண்டிவனம் நகர தலைவர் வெங்கடேச பெருமாள், சந்திரலேகா, மாவட்ட செயலாளர்கள் கனகராஜ், ராஜன், மகளிர் அணி ராதிகா, முத்துலட்சுமி, பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.

