/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புறவழிச்சாலை மேம்பாலம் கீழ் சாலையில் மெகா பள்ளம்
/
புறவழிச்சாலை மேம்பாலம் கீழ் சாலையில் மெகா பள்ளம்
புறவழிச்சாலை மேம்பாலம் கீழ் சாலையில் மெகா பள்ளம்
புறவழிச்சாலை மேம்பாலம் கீழ் சாலையில் மெகா பள்ளம்
ADDED : டிச 05, 2025 06:09 AM

விழுப்புரம்: விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை துவங்கும் பகுதியின் மேம்பாலம் கீழ் சாலையில் ஏற்பட்டுள்ள மெகா சைஸ் பள்ளங்களால் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
விழுப்புரம் - ஜானகிபுரம் கூட்ரோட்டில் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை துவங்குகிறது. இந்த கூட்ரோடு வழியாக விழுப்புரத்தில் இருந்து திருச்சி, நாகப்பட்டினம், புதுச்சேரி மார்க்கங்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், கூட்ரோடு மேம்பாலத்தின் கீழ் திருச்சி மார் க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் விழுப்புரத்திற்கு திரும்பும் பகுதியில் சாலையின் சென்டரில் மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அவதியடைந்து வரு கின்றனர். குறிப் பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
எனவே, பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

