/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எஸ்.ஐ.ஆர்.. திருத்த பணி விபரம் அரசியல் கட்சியினருக்கு வழங்கல்
/
எஸ்.ஐ.ஆர்.. திருத்த பணி விபரம் அரசியல் கட்சியினருக்கு வழங்கல்
எஸ்.ஐ.ஆர்.. திருத்த பணி விபரம் அரசியல் கட்சியினருக்கு வழங்கல்
எஸ்.ஐ.ஆர்.. திருத்த பணி விபரம் அரசியல் கட்சியினருக்கு வழங்கல்
ADDED : டிச 05, 2025 06:10 AM

திண்டிவனம்: திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர்., திருத்த பணி தொடர்பாக அனைத்து கட்சி பிரநிதிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
திண்டிவனம் சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடர்பான இறப்பு, இடமாற்றம், இரட்டை பதிவு உள்ளிட்ட விவரங்களை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரிதிநிதிகளுக்கு வழங்கும் கூட்டம் நடந்தது.
சப் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., - வி.சி., - மா.கம்யூ., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடர்பான ஆவணங்களை வழங்கினார்.
இதே போல் திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் மயிலம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முகுந்தன் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கினர்.
தாசில்தார் யுவராஜ், தேர்தல் பிரிவு தாசில்தார் விமல்ராஜ், தேர்தல் பிரிவு உதவியாளர் நிர்மல்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.