/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்பாதி கோவில் பிரச்னை சமாதான கூட்டம் ஒத்திவைப்பு
/
மேல்பாதி கோவில் பிரச்னை சமாதான கூட்டம் ஒத்திவைப்பு
மேல்பாதி கோவில் பிரச்னை சமாதான கூட்டம் ஒத்திவைப்பு
மேல்பாதி கோவில் பிரச்னை சமாதான கூட்டம் ஒத்திவைப்பு
ADDED : மார் 20, 2025 05:14 AM

விழுப்புரம்: மேல்பாதி தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் வழிபாட்டு பிரச்னை சம்பந்தமான சமாதான கூட்டத்தில் தீர்வு ஏற்படாததால், நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விக்கிரவாண்டி அருகே மேல்பாதி தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 7 ம் தேதி ஒரு சமூதாயத்தினர் கோவிலுக்குள் செல்வதை கிராம மக்கள் தடுத்ததாக பிரச்னை ஏற்பட்டது. இதனால், 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கோவில் மூடி சீல் வைக்கப்பட்டது.
பின், கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 18 ம் தேதி முதல் கோவில் திறக்கப்பட்டு பூசாரி மூலம் ஒருகால பூஜை மட்டும் நடந்தது.
இவ்வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், தடை உத்தரவை ரத்து செய்தும், அனைத்து சமூதாயத்தினரும் கோவிலுக்குள் சென்று வழிபடலாம் என உத்தரவிட்டனர்.
அதில், அனைத்து சமூதாயத்தினரையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்தி கோர்ட் உத்தரவை தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி, நேற்று விழுப்புரம் ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமையில், அக்கிராம இரு சமூக மக்கள் முன்னிலையில் சமாதான கூட்டம் நடந்தது.
அதில் ஒரு தரப்பினர், கிராம முக்கியஸ்தர்களிடம் கூறிவிட்டு அரசு உத்தரவை ஏற்பது சம்பந்தமாக இருநாளில் முடிவை தெரிவிப்பதாக கூறினர்.
மற்றொரு தரப்பினர், வரும் 24ம் தேதிக்குள் கோவிலுக்குள் சென்று சுவாமி வழிபாடு செய்ய வேண்டும். இதற்கு போலீஸ் பாதுகாப்போடு செல்ல ஏற்பாடு செய்ய கூறினர்.
இதையடுத்து, ஆர்.டி.ஓ., முருகேசன், வரும் 21ம் தேதி மீண்டும் சமாதானம் கூட்டம் நடத்தி, சுமூக தீர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.
தாசில்தார் கனிமொழி உடனிருந்தார்.