UPDATED : ஜூலை 13, 2026 05:07 PM
ADDED : ஜூலை 13, 2026 05:01 PM
விழுப்புரம்: ஓய்வு பெற்ற ஆசிரியர் முடியப்பனின் 15ம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி, முகையூர் மகிமை மாதா சமுதாய கூடத்தில் நடந்தது..
நிகழ்ச்சிக்கு, பங்குதந்தை அற்புதராஜ், பள்ளி முதல்வர் மகிமைதாஸ் ஒளி தலைமை தாங்கி, ஜெபம் செய்தனர். தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, உதவி இயக்குநர் ஜோசப் கிறிஸ்துராஜ், முடியப்பன் படத்தை திறந்து வைத்தார்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், ஓய்வு பெற்ற ஆசிரியை ஆசைமரி, திருமணி பெரியநாயகம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன், தலைமை ஆசிரியை பிரான்சிஸ்கா, தலைமை ஆசிரியர் சூசைநாதன், சுகாதார துறை ஜெயராஜ், ஆசிரியர்கள் மரியஜோசப், முகைமுத்து, ராமமூர்த்தி, இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன், எழுத்தாளர் அசதா, தலைமை ஆசிரியர் லீமா ரோஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, நினைவு மலரை டாக்டர் பிரான்சிஸ் சேவியர் வெளியிட பீட்டர் பால் பெற்று கொண்டார். தொடர்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை, பங்குபேரவை செயலாளர் பெர்னான்டஸ், ஆசிரியர் அந்தோணி சந்தோஷ்பால் ஒருங்கிணைத்தனர்.
