ADDED : செப் 27, 2025 02:24 AM

திண்டிவனம் : திண்டிவனம் 'நெல்மண்டி' கண்ணன் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் டி.கே.பி.ரமேஷ் தந்தை கண்ணனின் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.
திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் நடந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் மஸ்தான் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தி, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வழக்கறிஞர் டி.கே.பி.ரமேஷ் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.,மாசிலாமணி, மாவட்ட அவைத்தலைவர் சேகர், நகர தி.மு.க.,செயலாளர் கண்ணன், முன்னாள் நகர செயலாளர் கபிலன், நகர்மன்ற தலைவர் நிர்மலாரவிச்சந்திரன், நகர அவைத்தலைவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர்கள் சுதாகர், நந்தகுமார், பரணிதரன், சத்தீஷ், பிர்லாசெல்வம், பாஸ்கர், மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் பிரகாஷ்,மாவட்ட பிரதிநிதி முருகன், முன்னாள் கவுன்சிலர் பாஸ்கர், முன்னாள் நகர துணை செயலாளர் அசோக்குமார், மீனவர் அணி ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.