/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளியில் என்.எஸ்.எஸ்., துவக்க விழா
/
அரசு பள்ளியில் என்.எஸ்.எஸ்., துவக்க விழா
ADDED : செப் 27, 2025 02:26 AM

மயிலம் : மயிலம் அடுத்த பாதிராப் புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., திட்ட துவக்க விழா, கொல்லியங்குணத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளி யில் நடந்தது.
பாதிராப்புலியூர் பள்ளி தலைமை குமரவேல் ஆசிரியர் தலைமை தாங்கினார். துணை தலைமை ஆசிரியர் ராமசாமி, துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீ, ஆசிரியர்கள் தமிழரசி, அமுதா முன்னிலை வகித்தனர். நாட்டு நல பணித்திட்ட அலுவலர் பஞ்சாட்சரம் வரவேற்றார்.
விழாவில், சிறப்பு விருந்தினராக சவிதா பல்கலை இணை பேராசிரியர் செல்வ கணபதி கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், 'நாட்டு நலப்பணித் தி ட்டத்தில் மாணவர்கள் சேர்ந்து அரசு பள்ளி வளாகத்தில் மரங்களை நடுவது, கோவில் வளாகங்களை சீரமைப்பது, விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவது என பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
இவை எல்லாம் மாணவர்களுக்கு ஒரு அனுபவ பாடமாக அமையும். பணிக்கு செல்லும்போது அடித்தளமாக அமையும்,' என்றார். மாணவி தேஜாஸ்ரீ நன்றி கூறினார்.