/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆண்கள் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை அறிமுக விழா
/
ஆண்கள் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை அறிமுக விழா
ADDED : நவ 22, 2025 04:51 AM

விழுப்புரம்: விழுப்புரம் பெருந்திட்ட வளாக, உள்விளையாட்டு அரங்கத்தில், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்தியா ஹாக்கி கூட்டமைப்பு இணைந்து நடத்தும் ஆண்கள் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை அறிமுக விழா நடந்தது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 14வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை-2025 முதல் முறையாக தமிழகத்தில் நடக்கிறது. இப்போட்டி வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10ம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடக்கிறது. உலககோப்பை போட்டியில் சர்வதேச அளவில் 24 அணிகள் கலந்து கொள்கின்றன.
உலக கோப்பை போட்டிக்கான வெற்றி கோப்பை தமிழ்நாடு முழுதும் சுற்றுப் பயணமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
விழுப்புரம் வந்த கோப்பைக்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி வரவேற்றார். பொன்முடி எம்.எல்.ஏ., கோப்பையை அறிமுகம் செய்தார். விழுப்புரம் ஹாக்கி சங்க தலைவர் கவுதம சிகாமணி முன்னிலை வகித்தார்.
மாவட்ட சேர்மன் ஜெயசந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் அருள் எட்வின் உட்பட பலர் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த உலக கோப்பைக்கு இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் கொண்டு வரப்பட்ட உலகக் கோப்பை வெற்றி கோப்பையினை வரவேற்று விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் உலக கோப்பை மற்றும் அதற்கான சின்னமான காங்கேயம் காளை லட்சினையும் அறிமுகம் செய்தார்.
ஆர்.கே.எஸ்., கல்லுாரி சேர்மன் மகுடமுடி, டி.எஸ்.பி., தங்கவேல், கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர், மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் விளையாட்டு துறை அலுவலர்கள், வீளையாட்டு வீரர், வீராங்கனைகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

