தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மயிலம் பொறியியல் கல்லுாரியில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மயிலம் பொறியியல் கல்லுாரியில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மயிலம் பொறியியல் கல்லுாரியில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி


UPDATED : நவ 17, 2026 07:33 PM

ADDED : நவ 17, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 07:33 PM ADDED : நவ 17, 2026 07:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: மயிலம் பொறியியல் கல்லுாரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலம் பகுதியை சுற்றியுள்ள தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெறுவதற்கான ‘கான்ஃப்லென்ஸ் ஃபார் சென்டம்’ தலைப்பில் வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் துவக்க விழாவிற்கு, மயிலம் கல்விக்குழுமம் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயக்குனர் செந்தில், கல்லுாரி முதல்வர் ராஜப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

‘சி4சி’ தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில், இயற்பியல், வேதியியில், கணிதம் பாடங்களில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எப்படி பெறுவது என்பது குறித்த வழிகாட்டுதல், ஆலோசனைகள், இதற்கான உத்திகள் குறித்தும் சிறந்த ஆசிரியர்கள் மூலம் கூறப்பட்டது.

இதில், நெய்வேலி என்.எல்.சி., பெண்கள் மேல்நிலை பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாலகுருநாதன், வேதியியல் பாடத்திற்கும், வழுதாவூர் அரசு மேல்நிலை பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் திருமுருகன், கணித பாடத்திற்கும், தேப்பிரம்பட்டு அரசு மேல்நிலை பள்ளி முதுநிலை ஆசிரியர் ஏழுமலை, இயற்பியல் பாடத்திற்கும் பயிற்சியளித்து விளக்கினர்.

இந்த நிகழ்ச்சியில், 700க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர். ஏற்பாடுகளை மயிலம் பொறியியல் கல்லுாரியின் மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பு துறை தலைவர் கணேசன் தலைமையில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us