ADDED : செப் 25, 2024 10:37 PM

எம்.எல்.ஏ.,- கலெக்டர் ஆலோசனை
விக்கிரவாண்டி தொகுதியில் ரேஷன் பொருட்களை வினியோகிக்க 159 ரேஷன் கடைகள் உள்ளன. சில பகுதிகளில் ரேஷன் பொருட்கள் வாங்க வெகுதுாரம் சென்று வாங்க வேண்டியுள்ளது. இது தொடர்பாக அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பழனி மற்றும் இணைப்பதிவாளர் வெங்கடேசன் ஆகியோரை சந்தித்து, தொகுதி மக்கள் அந்தந்த பகுதிகளில் ரேஷன் பொருட்கள் வாங்கும் வகையில் பகுதி நேர ரேஷன் கடைகளாக பிரிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். மாவட்ட பதிவாளர் ரஞ்சனி, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
தி.மு.க., மாணவரணி நேர்காணல்
திண்டிவனத்தில், வடக்கு மாவட்ட தி.மு.க., மாணவரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடந்தது. நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். நேர்காணலை அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்து பேசினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், நகர செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் ரமணன், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், ராஜாராம், பழனி, தயாளன், மணிமாறன், செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, நகர துணை செயலாளர் கவுதமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாநில மாணவரணி துணை செயலாளர்கள் அமுதரசன், தமிழரசன் ஆகியோர், மாணவரணி நிர்வாகிகள் பதிவிக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினர்.
சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சாலை பணியாளர் சங்கத்தினர், பணி நீக்க கால ஊதியத்தை வழங்க வேண்டும். நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி, சங்கராபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் வட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கலெக்டர் திடீர் ஆய்வு
விக்கிரவாண்டி ஒன்றியம், வெட்டுக்காடு ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் குளம் மேம்பாட்டு பணி, தென்னவராயன்பட்டு ஊராட்சியில் தேசிய வேலை உறுதி திட்டத்தில் நடைபெறும் புதிய குளம் அமைக்கும் பணி மற்றும் பனையபுரத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் கட்டப்படும் வீடுகளை கலெக்டர் பழனி ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
செயற்பொறியாளர் ராஜா, பி.டி.ஓ.,க்கள் பாலச்சந்திரன், குலோத்துங்கன், ஒன்றிய பொறியாளர்கள் முருகன், சோமசுந்தரம், குமரன் மற்றும் ஊராட்சி தலைவர்கள் பொற்கலை, சக்தி ஜெகப்பிரியா, காந்தரூபீ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நீடித்த நவீன கரும்பு சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி, அட்மா திட்டத்தின் கீழ் நடந்தது. சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநர் கண்ணன் தலைமை தாங்கினார். வேளாண் துணை இயக்குநர் பெரியசாமி, உதவி இயக்குநர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். கரும்பு பெருக்க அலுவலர் ராஜேஸ் நாராயணன் வரவேற்றார்.
கரும்பு அலுவலர் முருகேசன், கரும்பு வளர்ச்சி உதவியாளர் சாகுல் அமீது ஆகியோர் கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர். உதவி வேளாண் அலுவலர் சதிஷ்குமார் சொட்டு நீர் பாசனத்தின் பயன்பாடுகள் குறித்தும், உதவி வேளாண் அலுவலர் வெங்கடேசன் வேளாண் துறையின் மானிய திட்டங்கள் குறித்து பேசினர்.
மருந்தாளுனர்கள் தின விழா
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனையில் நடந்த உலக மருந்தாளுனர்கள் தின விழாவிற்கு டீன் ரமாதேவி தலைமை தாங்கி கேக் வெட்டி , மருந்தாளுனர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் துணை முதல்வர் சங்கீதா, மருந்து கிடங்கு அலுவலர்கள் அறிவுக்கண், நிர்மலா, நிர்வாக அலுவலர் சிங்காரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
என்.எஸ்.எஸ்., தின விழா
செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., தின விழா தலைமையாசிரியர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ராமசாமி வரவேற்றார். விழாவில், மாவட்ட அளவில் நடந்த கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாசணவர்களுக்கு பி.டி.ஏ., தலைவர் மாணிக்கம் சான்றிதழ் வழங்கினார். என்.எஸ்.எஸ்., ஆசிரியர் ஏழுமலை நன்றி கூறினார்.
இலவச சைக்கிள் வழங்கல்
வல்லம் ஒன்றியம் மேல்சித்தாமூர், இல்லோடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்களுக்கு ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் அரசின் இலவ சைக்கிள்களை வழங்கினார். கல்வி குழு உறுப்பினர் இளம்வழுதி, ஒன்றிய கவுன்சிலர் பத்மநாதகுமார், ஊராட்சி தலைவர்கள் மகிமை தாஸ், இந்திரா பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர்கள் பாஸ்கர், மோகன் குமார் வரவேற்றனர். தி.மு.க., நிர்வாகிகள் லட்சுமணன், முருகன், ராமதாஸ், மேலாண்மை குழு தலைவர் விஜயலட்சுமி, பி.டி.ஏ., தலைவர் சமுத்திர விஜயன் கலந்து கொண்டனர்.
உலக மருந்தாளுனர் தின விழா
சூர்யா பார்மஸி கல்லுாரியில் உலக மருந்தாளுனர் தின விழாவை நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து கல்லுாரியில் படித்து முடித்த மாணவர்களுக்கு பார்மசிஸ்ட் பணி ஆணை பெற்றவர்ளை பாராட்டினார். முன்னதாக கல்லுாரி முதல்வர் அன்பழகன் வரவேற்றார். புதுச்சேரி ஏரியஸ் பார்முலேஷன் நிர்வாக இயக்குனர் நடராஜ், விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுாரி மருந்தக அதிகாரி நிர்மலா, துறை தலைவர் ஜெகன்நாதன் ஆகியோர் 'மருந்தாளுனர்கள் கலந்துரையாடல் உலக சுகாதார நன்மைக்காக' என்ற தலைப்பில் பேசினர்.
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்
கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் கிராமத்தில் அ.தி.மு.க., கட்சியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி கட்சியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.
ஒன்றிய செயலாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். முன்னால் மாவட்ட கவுன்சிலர் ராயப்பன் வரவேற்றார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், ஊராட்சி துணை தலைவர் அலமேலு வீரமணி, கிளை செயலாளர் தேவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நான் முதல்வன் திட்ட சிறப்பு முகாம்
மயிலம் தமிழ்க் கல்லுாரியில் நடந்த நான் முதல்வன் திட்ட உயர்வுக்கு படி சிறப்பு முகாமை அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லூரி செயலர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் வரவேற்றார்.
ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன், கவுன்சிலர் செல்வகுமார், ஊராட்சி தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பொறுப்பு சிவசுப்ரமணியம், தமிழ்நாடு திறன் மேம்பாடு கழக இயக்குனர் நடராஜன், மாவட்ட கல்வி அலுவலர் சுமதி, தாசில்தார் சிவா வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியை பேராசிரியர் வள்ளி தொகுத்து வழங்கினார்.
முகாமில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 78 பேரில் 7 பேருக்கு மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு ஆணை வழங்கப்பட்டது. மற்ற 71 பேருக்கு பிற கலை அறிவியல் கல்லுாரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிகளில் சேர்வதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது.