ADDED : அக் 03, 2024 11:04 PM

கிராம சபை கூட்டம்
வளத்தி அடுத்த ஆரியபுரவடை கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் கண்மணி, ,பி.டி.ஓ.,கள் சிவசண்முகம், சையத்முகமத், பற்றாளர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தனர். மஸ்தான் எம்.எல்.ஏ., பேசினார். ஊராட்சி நிர்வாகம் நிதி , அத்தியாவசிய பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
கண்டமங்கலம்: ஊராட்சி தலைவர் அய்யனார், ஒன்றிய கவுன்சிலர் ரஞ்சிதம் ராஜாமணி, கிராம ஊராட்சி பி.டி.ஓ., சிவக்குமார் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் புருஸ்லி வரவேற்று தீர்மானங்களை வாசித்தார். மாவட்ட துணை இயக்குனர் செந்தில்முருகன், வட்டார மருத்துவ அலுவலர் ஆர்த்தி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்திக்கொள்வது குறித்து விளக்கி பேசினர்.
விக்கிரவாண்டி: தெற்கு பொன்னங்குப்பம் கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவி விசாலாட்சி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், துணை பி.டி.ஓ., ஷாகிதா பானி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் ராஜா வரவேற்றார். தாசில்தார் யுவராஜ் பங்கேற்று மக்கள் குறைகளை கேட்டு தீர்மானங்களை நிறைவேற்றினார் .வருவாய் ஆய்வாளர் தெய்வீகன் வி .ஏ .ஓ., பெண்ணரசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சிந்தாமணியில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவி வாசுகி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சத்தியமூர்த்தி வரவேற்றார். ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை கலந்து கொண்டு மக்கள் குறைகளை கேட்டு தீர்மானங்களை நிறைவேற்றினார்.
திருவெண்ணெய்நல்லுார்: சின்னசெவலை ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் மேகலா தலைமை தாங்கினார். கலெக்டர் பழனி, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயனன், முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி, மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஓம்சிவசக்திவேல் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் வெண்ணிலா தனசேகர் வரவு செலவு கணக்குகளையும், தீர்மானங்களையும் வாசித்தார். அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கிராம மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
ஆலோசனைக் கூட்டம்
மேல்மலையனுாரில் நடந்த பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, ஒன்றிய சேர்மன் கண்மணி தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ் பிரேம்குமார், ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், பி.டி.ஓ.,கள் சிவசண்முகம், சையத்முகமத், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சவுமியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெண் குழந்தைகள் சார்ந்த பிரச்னைகளை கண்காணித்திட ஊராட்சி தலைவர்கள், பெற்றோர்கள் மூலம் கிராம அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு பயிற்சி
பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆத்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தலைப்பில் நடந்த பயிற்சிக்கு, வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கரும்பு பெருக்கு அலுவலர் வில்லியம் ஆண்டணி பேசினார். செங்கல்ராயன் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்க கவுரவ தலைவர் பக்தவச்சலம், வேளாண் உதவி இயக்குனர் ராஜேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.
பக்தர்கள் நடைபயணம்
கண்டாச்சிபுரம் அடுத்த ஒடுவன்குப்பம் லட்சுமி நாராயணன் கோவிலில் நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து பஜனைக் குழுவினரின் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, காலை 8:00 மணியளவில் திருவரங்கம் கோவிலுக்கு பக்தர்கள் பாதையாத்திரை மேற்கொண்டனர். யாத்திரையில், ஒடுவன்குப்பம், மேலவாலை, பீமாபுரம் பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்றனர்.
ராஜா தேசிங்கு நினைவு நாள்
செஞ்சியை ஆண்ட ராஜாதேசிங்கு உயிர் நீத்த கடலி கிராமத்தில் 310 வது நினைவு நாளை முன்னிட்டு செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் ராஜாதேசிங்கின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பொந்தில் சமுதாய தலைவர் பவானிசிங், பொதுச் செயலாளர் பிரகாஷ், துணைத் தலைவர் விஜயகுமார், பொருளாளர் பாலாஜி, உதவி செயலாளர் ராஜேந்திரன், ஹரி, பாபு உதயசிங், ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் செல்வி ராமசரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வீடு உரிமையாளர் சங்க கூட்டம்
விழுப்புரத்தில் நடந்த வண்டிமேடு வீடு உரிமையாளர்கள் நலச்சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் தனபால் தலைமை தாங்கினார். செயலாளர் மணி, பொருளாளர் சையத் காதர், துணைத் தலைவர் ஜலீல், துணைச் செயலாளர் சிவசங்கரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நகரில் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
என்.எஸ்.எஸ்., முகாம் துவக்க விழா
ரெட்டணை ஹோலி ஏஞ்சல் பள்ளி நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் சார்பில் நெடிமொழியனுாரில் நடந்த சிறப்பு என்.எஸ்.எஸ்., முகாமில் தாளாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.
முதுநிலை முதல்வர் அகிலா முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி முகாமை துவக்கி வைத்தார். மாணவர்கள் துாய்மைப்பணியில் ஈடுபட்டனர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் ராமமூர்த்தி, ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
போட்டி தேர்வு விழிப்புணர்வு
பாதிராப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் கூட்டேரிப்பட்டு கமலா நேரு அரசு பள்ளியில் நடந்த என்.எஸ்.எஸ்., திட்ட சிறப்பு முகாமில் போட்டி தேர்வில் பங்கேற்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பாதிராபுலியூர் பள்ளி தலைமை ஆசிரியர் பழனி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் அஞ்சலாட்சி, கார்த்திகா முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் பஞ்சாட்சரம் வரவேற்றார். வெளியனுார் வி.ஏ.ஓ., கலைச்செல்வன், அரசு வேலைக்கு செல்வதற்கான டி.என்.பி.எஸ்.சி., வங்கி, ரயில்வே தேர்வுகளில் பங்கேற்பது குறித்து பேசினார்.
அரசு பள்ளிகளுக்கு சீருடை வழங்கல்
மயிலம் ஒன்றியத்தில் 47 கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட ஒன்றிய, நடுநிலை மற்றும் துவக்கப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டு வருகிறது. மயிலம் வட்டாரக் கல்வி அலுவலர் கோவர்தனன் தலைமையில் பள்ளிகளுக்கு சீருடை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலர் மதன்குமார், பள்ளி தலைமை ஆசிரியர்கள் அருள்மொழிவர்மன், அருளப்பன், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
முதியோர்களுக்கு நலத்திட்ட உதவி
செஞ்சியில் அரிமா சங்கம் சார்பில் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு முதியோர்களுக்கு போர்வை, புடவை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சங்கத் தலைவர் பரிமளகந்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் முருகன், சொர்ணலதா, சண்முகம் முன்னிலை வகித்தனர். செயலாளர் புகழேந்தி வரவேற்றார். நிகழ்ச்சியில், 20 முதியவர்களுக்கு போர்வையும், புடவையும் வழங்கப்பட்டது.
காங்., கட்சியினர் பாத யாத்திரை
விக்கிரவாண்டியில் காங்., வடக்கு மாவட்டம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டும், மத்திய அரசை கண்டித்தும் நடந்த பாதயாத்திரை நிகழ்ச்சியை மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசினார். மாநில துணைத்தலைவர் குலாம் மொய்தீன் மத்திய அரசின் பா.ஜ., அடக்கு முறைகளை கண்டித்து பேசினார். மாவட்ட பொருளாளர் கருணாகரன், நகர தலைவர் குமார், பொதுச் செயலாளர் குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர். விக்கிரவாண்டி கடைவீதி வழியாக ரெட்டணை வரை பாதயாத்திரை நடந்தது.
கருத்தரங்கம்
மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லுாரியில் கணினி துறை சார்பில் 'வீடியோ, போட்டோ எடிட்டிங்' கருத்தரங்கிற்கு, கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். கணினி அறிவியல் துறை பேராசிரியர் ரேவதி வரவேற்றார். நிகழ்ச்சியில் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியின் காட்சி ஊடகவியல் பேராசிரியர் செந்தமிழ்ச்செல்வன், உதவி பேராசிரியர் ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.