sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செய்தி சில வரிகளில்...

/

செய்தி சில வரிகளில்...

செய்தி சில வரிகளில்...

செய்தி சில வரிகளில்...


ADDED : பிப் 21, 2024 08:13 AM

Google News

ADDED : பிப் 21, 2024 08:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பணி ஓய்வு பாராட்டு விழா


திண்டிவனம்: ஒலக்கூர் வட்டாரக்கல்வி அலுவலராக பணிபுரிந்த அக்சிலியம் பெலிக்ஸ் ஒய்வு பெற்றதையொட்டி, திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செல்வகுமார் தலைமை தாங்கினார். தேசிய நல்லாசிரியர் பிரான்சிஸ் வரவேற்றார். விழாவில் மாவட்டக் கல்வி அலுவலர் (மெட்ரிக் பள்ளிகள்) சுப்புராயன், ஆசிரியர் பயிற்சி பள்ளி முன்னாள் முதல்வர் டோமினிக் ரொசேரியோ, புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜான் போஸ்கோ உட்பட பலர் பங்கேற்றனர். பணி ஒய்வு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர் செல்வகுமாருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

பள்ளி ஆண்டு விழா


கண்டாச்சிபுரம்: ஆலம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த ஆணடு விழாவிற்கு, தலைமை ஆசிரியர் மோனிக் அந்தோணி அம்மாள் தலைமை தாங்கினார். ஊராட்சித் தலைவர் ராஜகுமாரி சக்திவேல், ஒன்றிய கவுன்சிலர் ராஜ ராஜேஸ்வரி, துணைத் தலைவர் விஜயா முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சகாயராஜ் வரவேற்றார். ஆசிரியர் கல்பனா அண்டு அறிக்கை வசித்தார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் பானுமதி, அஞ்சலாதேவி உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி மாணவ,மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது.

பயிற்சி முகாம்


விழுப்புரம்: ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் காணை வி.இ.டி., கல்வியியல் கல்லுாரியில் நடந்தது. முகாமை முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் தொடங்கி வைத்தார். மாவட்ட கன்வீனர் பாபு செல்வதுரை தலைமை தாங்கினார். பொருளாளர் எட்வர்ட் தங்கராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மாவட்ட கல்வி அலுவலர்கள் மகாலட்சுமி, சுப்பராயன் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.

வானுார், காட்ராம்பாக்கம் அரசு பள்ளி, முகையூர், காணை வட்டார பள்ளிகள், மருதுார் ஜான்டூயி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பயிற்சி பெற்றனர். இணையவழி குற்றங்களை தடுப்பது, சாலை பாதுகாப்பு, உலக வெப்பமாதலை தடுத்தல், பேரிடர்கால முன்னெச்சரிக்கைகள், முதலுதவி பயிற்சி உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

பள்ளி ஆண்டு விழா


கண்டமங்கலம்: பள்ளித்தென்னல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவிற்கு, ஊராட்சி தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கிரிஜா, ஒன்றிய கவுன்சிலர் அமுதா முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் வைத்தியநாதன் வரவேற்றார். ஆசிரியை சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு புதுச்சேரி சற்குரு ஓட்டல் உரிமையாளர் அமர்நாத் தனது சொந்த செலவில் பரிசு வழங்கினார். ஓய்வுபெற்ற ஆசிரியர் நாராயணசாமி, தமிழ்நாடு கிராம வங்கியின் காசாளர் சுரேஷ் வாழ்த்திப் பேசினர்.

நினைவேந்தல் நிகழ்ச்சி


திண்டிவனம்: தீவனுாரில் தே.மு.தி.க., சார்பில் விஜய்காந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கி, விஜய்காந்த் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மாவட்ட துணைச் செயலாளர் சுந்தரேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் தயாநிதி, ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், புண்ணிய கோட்டி, ராஜ்குமார், செல்வம், பாலசுந்தரம் , முருகன், கனகராஜ், அவைத் தலைவர் முருகன், நிர்வாகிகள் மணிகண்டன், வெங்கடேசன், பிரேமா, தண்டபாணி, பூபதி, மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

மயிலம் ஒன்றிய கூட்டம்


மயிலம்: மயிலம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமதாஸ் முன்னிலை வகித்தார். துணைச் சேர்மன் புனிதராமன் வரவேற்றார். அலுவலக மேலாளர்கள் வெண்பா, கலைவாணி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், பொது சுகாதாரம் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பஞ்சபூத வழிபாடு


திண்டிவனம்: திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், மரகதாம்பிகை பள்ளி மைதானத்தில் சிறப்பு அர்ச்னை நடந்தது. இதில், பஞ்சபூத வழிபாடும், உலக நலம் வேண்டி சங்கல்பமும் நடந்தது. திண்டிவனம் வட்ட தலைவர் தர்மலிங்கம், மன்ற தலைவர் சுகுமார், நிர்வாகிகள் முரளிதர், கார்த்திக், பாலசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டம்


விழுப்புரம்: மாவட்ட நிலம், மனை முகவர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார். துணைத் தலைவர்கள் ஆறுமுகம், ரவிச்சந்திரன், துணைச் செயலாளர்கள் முருகன், அன்சாரி முன்னிலை வகித்தனர். பொருளாளர் புருஷோத்தமன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், பத்திரப்பதிவுத் துறையில் பொதுமக்களை தேவையற்ற காரணங்களைக் கூறி அலைக்கழிப்பு செய்வதை நிறுத்த வேண்டும். நில அளவைத் துறையில் துரிதமாக பட்டா வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணைச் செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

விளையாட்டு விழா


திண்டிவனம்: சிங்கனுார் சிராக் மாணவியர் விடுதியில் பலவை அமைப்பு சார்பில் பழங்குடி இருளர் குழந்தைகளுக்கான விளையாட்டு விழா நடந்தது. விழாவில் சென்னை மறை மாநில வளர்ச்சித் திட்ட இயக்குனர் மற்றும் கல்வி உதவியாளர்கள் வாழ்த்திப் பேசினர். விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்கினர். திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இருளர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். பலவை அமைப்பின் இயக்குனர் ஆரோக்கியசாமி, திட்ட இயக்குனர் அந்தோணி ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.

ரத்ததான முகாம்


வானுார்: தைலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, இளம் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தைலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமிற்கு கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) வில்லியம் தலைமை தாங்கி ரத்தானம் வழங்குவதின் நன்மைகள் குறித்து பேசினார். வணிகவியல் துறைத் தலைவர் தேவநாதன் வரவேற்றார். டாக்டர்கள் ஜெயபிரகாஷ், பாரதி முகாமை ஒருங்கிணைந்தனர். செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் குணசேகரி, சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

விழிப்புணர்வு கருத்தரங்கு


விழுப்புரம்: ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் அரசு மருத்துவக் கல்லுாரி சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவர் தேவிகா, புற்று நோய் தாக்கம் குறித்தும் மற்றும் உடலை பாதுகாக்க புகைப் பழக்கம், போதை பழக்கங்களை கைவிட வேண்டும். உடலில் ஏதேனும் மாற்றம் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி நோய் தன்மை அறிந்து செயல்படுவதன் மூலம் புற்று நோயில் இருந்து விடுபட முடியும் என அறிவுறுத்தினார். கல்லுாரி முதல்வர் ராபர்ட் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணக் கண்ணன் வரவேற்றார். துணை முதல்வர் சேகர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

நினைவு தின நிகழ்ச்சி


விழுப்புரம்: செயின்ட் ஜான் மாற்றுத்திறனாளிகள் மேல்நிலை பள்ளி மற்றும்செயின்ட் ஜான் முன்னேற்ற சங்க தலைவர் ஜெயச்சந்திரன் நினைவு நாளையொட்டி, மாம்பழப்பட்டு ரோடு இந்திரா நகரில் உள்ள பள்ளியில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், சிறுவர்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள், பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். சங்க செயலாளர் சவிதா நன்றி கூறினார்.

ஆலோசனைக் கூட்டம்


செஞ்சி: ஆரணி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, செஞ்சி சட்டசபை தொகுதியில் உள்ள 27 மண்டலங்களைச் சேர்ந்த மண்டல அலுவலர்கள், துணை மண்டல அலுவலர்கள் மற்றும் மண்டல உதவியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வட்டார வளமையத்தில் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வளர்மதி தலைமை தாங்கினார். தாசில்தார் ஏழுமலை முன்னிலை வகித்தார். லோக்சபா தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து தேர்தல் துணை தாசில்தார்கள் செஞ்சி மணிகண்டன், மேல்மலையனுார் சார்லி ஆகியோர் பயிற்சி அளித்தனர். ஏ.பி.டி.ஓக்கள், வட்டார கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.

திண்டிவனம் அருகே சிங்கனுாரில் நடந்த பழங்குடி இருளர் குழந்தைகளுக்கான விளையாட்டு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

வானுார் அடுத்த தைலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நடந்தது.






      Dinamalar
      Follow us