/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எம்.ஜி.ஆர்.,பிறந்த நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
எம்.ஜி.ஆர்.,பிறந்த நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்
எம்.ஜி.ஆர்.,பிறந்த நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்
எம்.ஜி.ஆர்.,பிறந்த நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : ஜன 18, 2024 04:13 AM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விக்கிரவாண்டி நகர எம்.ஜி.ஆர் ., மன்றம் சார்பில் நடந்த விழாவிற்கு நகர எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் சங்கர் தலைமையில் தொழிலதிபர் சதீஷ், பேரூராட்சி கவுன்சிலர்கள் பவானி ராஜேஷ், புஷ்பராஜ் முன்னிலையில் எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து , தலா 107 பேருக்கு எம்.ஜி.ஆர்., படத்துடன் இலவச வேட்டி, சேலை ,தென்ன மரக்கன்றுகளை வழங்கினார்.
நகரபேரவைச் செயலாளர் பலராமன்,நகர இலக்கிய அணி கண்ணன், மாவட்ட பிரதிநிதி சக்கரவர்த்தி, நிர்வாகிகள் தேவராசு,ராதாகிருஷ்ணன்,ராஜீ, மணிகண்டன், சுபான், வெங்கடேசன், மூர்த்தி,கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.