/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா
/
திண்டிவனத்தில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா
ADDED : ஜன 18, 2024 04:20 AM

திண்டிவனம்: திண்டிவனம் செஞ்சி ரோடில் மாவட்ட ஜெ.,பேரவை இணைச் செயலாளர் வடபழனி ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர்.பிறந்த நாள் விழா நடந்தது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.107 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திண்டிவனம் நகர அ.தி.மு.க.,சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
தொடர்ந்து செஞ்சி ரோட்டில் மாவட்ட ஜெ.,பேரவை இணைச் செயலாளர் வடபழனி ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில், நகர அ.தி.மு.க.,செயலாளர் தீனதயாளன் எம்.ஜி.ஆர்.படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்.
இதேபோல் நேரு வீதி காய்கறி மார்க்கெட்டில் மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணை தலைவர் ஏழுமலை ஏற்பாட்டில் பொது மக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் வெங்கடேசன், மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, கவுன்சிலர்கள் கார்த்திக், ஜனார்த்தனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.