ADDED : ஜூலை 29, 2025 07:18 AM
மினி பஸ் திட்டத்தின் கீழ், ஆணை பெற்றோர் சேவையை விரைந்து துவங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
தமிழக அரசின் 'விரிவான மினி பஸ் திட்டம் 2024' செயல்படுத்தும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 109 வழித்தடங்களுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு, 109 பேருக்கு செயல்முறை ஆணை வழங்கப்பட்டது.
மாவட்டத்தில், 26 மினி பஸ்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை விரைந்து துவங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், செயல்முறை ஆணை பெற்று மினி பஸ் சேவை துவங்காதவர்கள் உடனே மினி பஸ் வாங்கி வழித்தடத்தில் இயக்கிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.