/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு வெள்ள நிவாரணம் அனைவருக்கும் வழங்கப்படும் அமைச்சர் பொன்முடி தகவல்
/
அரசு வெள்ள நிவாரணம் அனைவருக்கும் வழங்கப்படும் அமைச்சர் பொன்முடி தகவல்
அரசு வெள்ள நிவாரணம் அனைவருக்கும் வழங்கப்படும் அமைச்சர் பொன்முடி தகவல்
அரசு வெள்ள நிவாரணம் அனைவருக்கும் வழங்கப்படும் அமைச்சர் பொன்முடி தகவல்
ADDED : டிச 14, 2024 03:45 AM

விழுப்புரம்: 'விழுப்புரம் மாவட்டத்தில், வெள்ள நிவாரண பொருட்கள், நாளை 15ம் தேதிக்குள் முழுமையாக வழங்கப்படும்' என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அவர், நிருபர்களிடம் கூறுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 4 லட்சத்து 12 ஆயிரத்து 355 பேருக்கு நிவாரண தொகை 2000 ரூபாய் மற்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை வழங்கப்பட்டுள்ளது. டோக்கன் பெறாத அனைவரும், இன்று (நேற்று) மாலைக்குள் நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட கணக்கீட்டின்படி, 87 ஆயிரத்து 936 ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இப்பணிகளும் நாளை 15ம் தேதிக்குள் முடிக்கப்படும். வெள்ள நிவாரணத் தொகை மற்றும் பொருட்களை முழுமையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், குறைபாடுகள் இருப்பதாக தெரிய வந்தால், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
முன்னதாக, விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டினை பார்வையிட்டார்.
கலெக்டர் பழனி, டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், தனி தாசில்தார் வசந்த கிருஷ்ணன் உடனிருந்தனர்.

