/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சின்ன முதலியார்சாவடியில் விரைவில் துாண்டில் வளைவு அமைக்கப்படும் அமைச்சர் பொன்முடி உறுதி
/
சின்ன முதலியார்சாவடியில் விரைவில் துாண்டில் வளைவு அமைக்கப்படும் அமைச்சர் பொன்முடி உறுதி
சின்ன முதலியார்சாவடியில் விரைவில் துாண்டில் வளைவு அமைக்கப்படும் அமைச்சர் பொன்முடி உறுதி
சின்ன முதலியார்சாவடியில் விரைவில் துாண்டில் வளைவு அமைக்கப்படும் அமைச்சர் பொன்முடி உறுதி
ADDED : அக் 16, 2024 07:26 AM

கோட்டக்குப்பம் : சின்ன முதலியார்சாவடி பகுதியில் விரைவில் துாண்டில் வளைவு அமைக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
பருவமழை முன்னேற் பாடுகள் குறித்து, கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட கடலோர பகுதி களில் அமைச்சர் ஆய்வு செய்தார்.
சின்ன முதலியார் சாவடி மீனவ கிராமத்தை பார்வையிட்ட அமைச்சர் பொன்முடி, மீனவ மக்களிடம் கனமழை பெய்ய இருப்பதால், மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையத்திற்கு சென்று தங்கும் படியும், தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படும் என உறுதியளித்தார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவது காரணமாக அனைத்து துறைகளின் சார்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோட்டக்குப்பம் பகுதிகளில் வசித்து வரும் மீனவர்களின் நலன் கருதி, இப்பகுதியில் 3 பேரிடர் பாதுகாப்பு முகாம்களில் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் தங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட சின்ன முதலியார்சாவடி உட்பட மீனவ கிராம மக்கள், துாண்டில் வளைவு அமைக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
அந்த வகையில் துாண்டில் வளைவு அமைப்பதற்கான அரசாணையை முதல்வர் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இந்த பகுதியில் விரைவில் துாண்டில் வளைவு அமைக்கப்படும்' என்றார்.
ஆய்வின் போது, விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, கலெக்டர் பழனி, எஸ்.பி., தீபக் சிவாச், திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகர மன்ற துணைத் தலைவர் சித்திக் அலி, கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, வானுார் ஒன்றிய சேர்மன் உஷா, கோட்டக்குப்பம் நகராட்சி கமிஷனர் புகேந்திரி மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.