/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அமைச்சர் பொன்முடி பேச்சு
/
முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அமைச்சர் பொன்முடி பேச்சு
முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அமைச்சர் பொன்முடி பேச்சு
முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அமைச்சர் பொன்முடி பேச்சு
ADDED : நவ 24, 2024 04:29 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கினார்.
அமைச்சர் பொன்முடி பேசுகையில், 'வரும் 28ம் தேதி மாலை 4:00 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் திண்டிவனம் வருகிறார்.
திண்டிவனம் நகரத்தின் எல்லையிலிருந்து முதல்வருக்கு வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது. தி.மு.க.வினர் திரளாக பங்கேற்று சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும்.
வரும் 27ம் தேதி துணை முதல்வர் உதயநிதிக்கு பிறந்த நாள் விழாவின் போது, மாவட்டம் முழுதும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். 28ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் கலந்து கொண்டு உரையாட உள்ளார்' என்றார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, புஷ்பராஜ், சீத்தாபதி, தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, மாவட்ட பொருளாளர் ரமணன், நகர செயலாளர் கண்ணன், ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்தன், துணை அமைப்பாளர் ரமேஷ், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பழனி, தயாளன், ராஜாராம், மணிமாறன், மாவட்ட நிர்வாகிகள் மலர்மன்னன், வசந்தா.
முன்னாள் நகர செயலாளர் கபிலன், கவுன்சிலர்கள் நந்தகுமார், பார்த்திபன், பரணிதரன், நகர பொருளாளர் ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன்.
செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார், ஒன்றிய கவுன்சிலர் ஊரல்அண்ணாதுரை, அவைத்தலைவர் அமராவதி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜா, வழக்கறிஞர் அசோகன், நகர துணைச் செயலாளர் கவுதமன், வர்த்தகர் அணி பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.