/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புற்றுக்கு பால் ஊற்றி வழிபட்ட அமைச்சர்
/
புற்றுக்கு பால் ஊற்றி வழிபட்ட அமைச்சர்
ADDED : செப் 22, 2024 01:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அருகே புற்றுக்கு அமைச்சர் மஸ்தான் பால் ஊற்றி வழிபட்டார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த திக்காமேடு கிராமத்தில் நடந்த சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் அமைச்சர் மஸ்தான் பங்கேற்றார்.
பூஜை முடிந்து, அருகில் உள்ள கெங்கையம்மன் கோவிலுக்கு சுவாமி கும்பிடச் சென்றார். அங்கு அம்மனை வழிபட்ட பின், அம்மன் சிலைக்கு பின்புறம் உள்ள பாம்பு புற்றில் பால் ஊற்றி வழிபட்டார்.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.