/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுத்திறனாளிக்கு அமைச்சர் உதவி
/
மாற்றுத்திறனாளிக்கு அமைச்சர் உதவி
ADDED : பிப் 09, 2024 11:25 PM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் காலிழந்த வாலிபருக்கு, அமைச்சர் மஸ்தான் செயற்கை கால் வழங்கி உதவினார்.
விழுப்புரம் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பஷிர். இவர்களுக்கு உடல் நலம் பாதித்ததால் இடது கால் அகற்றப்பட்டது. பின், பஷீர் தனது குடும்ப வாழ்வாதாரத்தை காக்க தனக்கு செயற்கை கால் வழங்க வேண்டும் என அமைச்சர் மஸ்தானிடம் கோரிக்கை மனு அளித்தார்.
மனு மீது அமைச்சர் மஸ்தான் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதன் பேரில், பஷிருக்கு 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடந்தது.
அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கி, பஷிருக்கு செயற்கை காலை வழங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.