/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,வில் அமைச்சர் ஆதரவாளர்கள் 'அப்செட்'
/
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,வில் அமைச்சர் ஆதரவாளர்கள் 'அப்செட்'
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,வில் அமைச்சர் ஆதரவாளர்கள் 'அப்செட்'
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,வில் அமைச்சர் ஆதரவாளர்கள் 'அப்செட்'
ADDED : மார் 18, 2025 04:43 AM
விழுப்புரம் மாவட்டத்தில், அமைச்சர் பொன்முடியும், மஸ்தானும் அமைச்சராக இருந்த சமயத்தில், இரண்டு அமைச்சர்களுக்கும் தனித்தனி கோஷ்டி இருந்தது. இதில் சமீபத்தில் மஸ்தானிடமிருந்து அமைச்சர் மற்றும் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவி அடுத்தடுத்து பறிக்கப்பட்டது.
இதனால் பொன்முடி மட்டுமே மாவட்ட அமைச்சர் என்ற அந்தஸ்தை பெற்றார். இதனால் வடக்கு மாவட்டத்திலிருந்த மஸ்தான் ஆதரவாளர்கள் பலர் பொன்முடி பக்கம் தலைவைத்து அரசியல் செய்துவந்தனர்.
இந்த சூழ்நிலையில், கட்சி தலைமை, கடந்த 7 மாதம் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த மஸ்தானுக்கு, மீண்டும் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியை வழங்கியது. இதனால் பொன்முடி பக்கம் சாய்ந்த நிர்வாகிகள் பலர் அதிர்ச்சியடைந்தனர்.
ஏற்கனவே விழுப்பும் சட்டசபை தொகுதி புதிதாக மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட லட்சுமணன் வசம் சென்றதில், பொன்முடி ஆதரவாளர்கள் கடும் அப்செட்டில் இருந்து வந்தனர். கட்சி தலைமைக்கு நேரடியாக சென்று பொன்முடி ஆதரவாளர்கள் முறையிட்டும் கட்சி தலைமை கண்டுகொள்ளவில்லை. இந்த சமயத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள பொன்முடி ஆதரவாளர்கள் பலர் மீண்டும் பழையபடி மஸ்தான் பக்கம் தலை வைத்து அரசியல் செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.