/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காணாமல் போன சிறுமி போலீசார் மீட்பு
/
காணாமல் போன சிறுமி போலீசார் மீட்பு
ADDED : செப் 23, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : வானுார் அருகே, காணாமல் போன சிறுமியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத் தனர்.
வானுார் அடுத்த பாப்பாஞ்சாவடியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது 17 வயது மகள் கடந்த இரு தினங்களுக்கு முன் காணாமல் போனார்.
இது குறித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
அதில், அந்த சிறுமி, திண்டிவனத்தில் ஒருவர் வீட்டில் இருப்பது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து நேற்று சிறுமியை போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.