sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 காணாமல் போன மனநலம் பாதித்த பெண் ஒப்படைப்பு

/

 காணாமல் போன மனநலம் பாதித்த பெண் ஒப்படைப்பு

 காணாமல் போன மனநலம் பாதித்த பெண் ஒப்படைப்பு

 காணாமல் போன மனநலம் பாதித்த பெண் ஒப்படைப்பு


ADDED : பிப் 27, 2026 06:21 AM

Google News

ADDED : பிப் 27, 2026 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: சென்னை, எக்மோர் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் ரமேஷ். இவரது 38; வயது மகள் திருமணமாகாதவர். மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி காணாமல் போனார்.

விழுப்புரம் பகுதிகளில் சுற்றித் திரிந்த பெண்ணை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கடந்த மாதம் புதிதாக திறக்கப்பட்ட ஈ.சி.ஆர்.சி., மையத்தில் பேனியன் வயாசிஸ் தொண்டு நிறுவனம் மூலம் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மனநல மருத்துவத்துறை தலைவர் புகழேந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்ததன் பேரில் அந்த பெண் சுயநினைவு பெற்றார். அவர் டாக்டர்களிடம் தனது வீட்டு முகவரி உறவினர்கள் பற்றி தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் அந்த முகவரிக்கு சென்று அந்த பெண்ணின் உறவினர்களை அழைத்து வந்தனர்.

நேற்று விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் (பொறுப்பு) சவுந்தர்ராஜன், மருத்துவ கண்காணி ப்பாளர் ரவிக்குமார், ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், டாக்டர் புகழேந்தி மற்றும் தொண்டு நிறுவன குழுவினர் முன்னிலையில் குடும்பத்தினரிடம் அந்த பெண்ணை ஒப்படைத்தனர்.

தனது பெண்ணை சுய நினைவோடு பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்து டாக்டர் குழுவினருக்கு நன்றி தெரிவித்து பெண்ணை அழைத்துச் சென்றனர்.






      Dinamalar
      Follow us