/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் அ.ம.மு.க., நிர்வாகி ராஜினாமா
/
திண்டிவனம் அ.ம.மு.க., நிர்வாகி ராஜினாமா
ADDED : பிப் 27, 2026 06:20 AM
திண்டிவனம்: திண்டிவனம் நகர அ.ம.மு.க., செயலாளர் ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியுடன் அ.ம.மு.க., கூட்டணி இணைந்தது. இக்கூட்டணியில் அ.தி.மு.க., இருப்பதால் கட்சியில் சில நிர்வாகிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. கட்சியின் துணை பொதுச் செயலாளர் மாணிக்ராஜா விலகி, தி.மு.க.,வில் இணைந்தார்.
இதேபோல் விழுப்புரம் மாவட்ட அ.ம.மு.க., பொதுச் செயலாளர் முத்து, விஜய் கட்சியியுடன் இணைவதற்கு பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவரை கட்சியிலிருந்து பொதுச் செயலாளர் தினகரன் நீக்கினார்.
இதற்கிடையே திண்டிவனம் நகர அ.தி.மு.க., செயலாளராக இருந்து வந்த முருகன், தனக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், கோவிந்தராஜ் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக திண்டிவனம் நகர அ.ம.மு.க.,செயலாளராக பதவி வகித்து வந்த முருகன், தனது பதவியை ராஜினாமா செய்தார் . இதற்கான கடிதத்தை கடந்த 24ம் தேதி, கட்சியின் பொதுச் செயலாளர் தினகரனுக்கு அனுப்பியுள்ளார். திண்டிவனத்தைச் சேர்ந்த முத்து மற்றும் முருகன் அ.ம.மு.க.,விலிருந்து விலகியுள்ளது, கட்சி நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

