/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காணாமல் போனவர் ஓடையில் சடலமாக மீட்பு
/
காணாமல் போனவர் ஓடையில் சடலமாக மீட்பு
ADDED : டிச 24, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: காணாமல் போன டிரைவர், ஓடையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வளத்தி அடுத்த நெகனுார் - வடகொல்லை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் ஏழுமலை, 45; டிராக்டர் டிரைவரான இவர் 21ம் தேதி மாலை 5; 45, மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை,
இந்நிலையில் நேற்று காலை, அதே ஊர் ஓடையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.